ஒரு குழந்தை காணாமல் போனால் முதல் 24 முதல் 48 மணி நேரங்கள் மிக மிக முக்கியமானவை. இதை காவல்துறையில் 'Golden Hours' என்று அழைப்பார்கள். அந்த நேரத்தில் எடுக்கப்படும் தீவிர நடவடிக்கைகளே குழந்தையைக் கண்டுபிடிக்க உதவும். ஆனால், செஞ்சி வழக்கில் உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை தற்போது வழக்கை மறுஆய்வு செய்த சிபிசிஐடி அதிகாரிகளுக்கு உள்ளூர் காவல்துறையின் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளில் பல குழப்பங்களும் முரண்பாடுகளும் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், தொடக்கத்தில் களத்தில் நின்ற காவலர்கள், எஸ்.ஐ, மற்றும் தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து வாக்குமூலம் பெறத் திட்டமிட்டுள்ளனர்
செய்திகள்
செஞ்சி சிறுமி வழக்கில் முதற்கட்டமாக விசாரித்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
🕒 29 அக்., 2026, 01:32 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •செஞ்சி சிறுமி வழக்கில் முதற்கட்டமாக விசாரித்த காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
