ஆதிதிராவிட விவசாயிகள் வளமிகு வேளாண்மை உதவித் திட்டத்தின் கீழ் தட்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்க லாம் என கலெக்டர் நல்லசிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 2026-27 பட்ஜெட்டில் வளமிகு வேளாண்மை உதவித் திட்டத் தின் கீழ் ஆதிதிராவிட விவசாயிகள் 1,000 பேருக்கு தட்கல் மின் இணைப்பு வழங்க தமிழக அரசு ரூ.26.9 கோடியை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட பட்டுள்ளது. இத்திட் டத்தின் மூலம் ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விவசாய வருமானத்தை உயர்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. விவசாய உற்பத்திக்கு தேவையான மின் மோட்டார் குதிரைத் திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும். அதன்படி 5 எச்.பி. மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.22 லட்சம் எனில், பயனாளி ரூ.25 ஆயிரம் மட் டும் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.24 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 7.5 எச்.பி. மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2% லட்சம் எனில், பயனாளி ரூ.27,500 மட்டும் பங்குத்தொ கையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.48 லட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். அதேபோன்று, 10 எச்.பி., 15 எச்.பி. மின் மோட்டாருக்கான மின் இணைப்புக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிட இனத்தை சார்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்த மாக இருப்பதுடன் அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளை கிணறு அமைக்கபட்டி ருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் ஏற்க னவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவராக இருக் கக்கூடாது. தகுதிகளுடைய ஆதிதிராவிட விவசாயிகள் https://tahdco.com/ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள்
ஆதிதிராவிட விவசாயிகள் தட்கல் மின்இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் -கலெக்டர் நல்லசிவன் தகவல்
🕒 29 அக்., 2026, 03:42 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •ஆதிதிராவிட விவசாயிகள் தட்கல் மின்இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்
- •-கலெக்டர் நல்லசிவன் தகவல்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
