Settings

முகப்பு/செய்திகள்/ரேஷன் கடைகளில் விற்கப்படும் கோதுமையில் கலந்திருப்பது ஆபத்தான விதையா? குழப்பத்தில் பொதுமக்கள்!
செய்திகள்

ரேஷன் கடைகளில் விற்கப்படும் கோதுமையில் கலந்திருப்பது ஆபத்தான விதையா? குழப்பத்தில் பொதுமக்கள்!

🕒 28 அக்., 2026, 11:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரேஷன் கடைகளில் விற்கப்படும் கோதுமையில் கலந்திருப்பது ஆபத்தான விதையா? குழப்பத்தில் பொதுமக்கள்!
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டம் புலிவலம் நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட கோதுமையில் விநோத விதைகளும் பூச்சிகளும் கலந்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம், புலிவலம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட கோதுமையில் மர்ம விதைகள் மற்றும் பூச்சிகள் போன்ற பொருட்கள் கலந்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டம் முழுவதும் சுமார் 700 நிரந்தர மற்றும் பகுதி நேர நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு அரிசி, சீனி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. கோதுமை வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து, ரேஷன் அட்டைதாரர்களுக்குத் தேவைக்கேற்ப 5 முதல் 10 கிலோ வரை கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் நியாயவிலைக் கடையில் வாங்கிய கோதுமையைச் சமைப்பதற்காகத் தண்ணீரில் அலசியுள்ளனர். அப்போது, கோதுமையுடன் கோதுமையை விடச் சிறிய அளவிலான முள் போன்ற விநோத விதைகள் மற்றும் பூச்சி போன்ற வடிவங்கள் அதிகளவில் மிதப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீரில் கழுவக் கழுவ இந்த விதைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்ததாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து நியாயவிலைக் கடை ஊழியர்களிடம் கேட்டபோது, கோதுமை மூட்டைகள் அனைத்திலும் இத்தகைய விதைகள் சிறிய அளவில் கலந்துள்ளதாகவும், இதுபற்றி தங்களுக்கு இதுவரை அதிகாரப்பூர்வப் புகார்கள் வரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், குடோன் அதிகாரிகளிடம் இதுகுறித்துத் தெரிவித்தபோது, சில மூட்டைகளில் இதுபோன்று இருக்கக்கூடும் எனத் தெரிவித்ததாக ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கோதுமையுடன் கலந்துள்ள இந்த விதைகள் அரவையின் போது மாவாகிவிடுவதால், இது உடல்நலத்திற்கு நன்மையா அல்லது தீமையா என்பதை இனம் காண முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். ஆடு, மாடுகளுக்குக் கூடப் போட முடியாத அளவிற்குத் தரமற்ற முறையில் கோதுமை விநியோகிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், அரசு உடனடியாக இதில் தலையிட்டு ஆய்வு நடத்தி, தரமான பொருட்களை விநியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔