Settings

முகப்பு/செய்திகள்/கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் ஆபத்து - மருத்துவமனையில் அனுமதி
செய்திகள்

கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் ஆபத்து - மருத்துவமனையில் அனுமதி

🕒 31 அக்., 2026, 11:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் ஆபத்து - மருத்துவமனையில் அனுமதி
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 9ஆம் வகுப்பு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரின் மகன் ராகுல் (14), அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் ராகுல் தனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பதற்காக ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் காந்திபுரம் பகுதியில் உள்ள சிகாமணி என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளான், அங்கு மூன்று சிறுவர்களும் கிணற்றில் குதித்து குளித்துள்ளனர். அப்போது நீச்சல் தெரியாததால் ராகுல் தண்ணீரில் மூழ்கியுள்ளான், இதனால் அதிர்ச்சியடைந்த உடன் சென்ற இரண்டு சிறுவர்களும் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது, இதையடுத்து சிறுவன் கிணற்றில் மூழ்கியதை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக கிணற்றில் இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராகுலை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த சிறுவனின் பெற்றோர் மகனின் நிலையை அறிந்து கத்தி கதறி அழுதனர். மேலும் சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில், உடல் மோசமடைந்ததால், மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிறுவனை அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற சிறுவன், நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔