கோபி அருகே உள்ள கள்ளிப் பட்டி, கொண்டையம்பாளையம், காராப்பாடி, ஆயிபாளையம், குருமந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நேந்திரன், கதளி, செவ்வாழை, ரஸ்தாளி உள்ளிட்ட ரக வாழைகளை விவசாயிகள் பயிரிட்டு உள்ளனர். 10 மாத கால பயிரான வாழையை காற்று, மழையில் இருந்து காப்பாற்றி விற்பனைக்கு கொண்டு செல்வதற்குள் விவசாயிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். ஒரு வாழைக்கு சராசரியாக 200 முதல் 300 ரூபாய் வரை செலவாகும் நிலையில் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் வாழை சாகுபடியை கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கியே செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அறுவடைக்கு தயாராக உள்ள வாழைத் தார்களை நள்ளிரவில் வரும் கும்பல் வெட்டி எடுத்துச்சென்று விடுகின்றனர். அதிலும் அதிக விலைக்கு விற்பனையாகும் செவ்வாழை போன்ற வாழைத் தார்களையே குறிவைத்து திருடி வருகின்றனர். ஒரு வாழைத்தார் சுமார் 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்பனையாகும் நிலையில் ஒவ்வொரு முறையும் 3 முதல் 4 வாழைத்தார்களை திருடிச் செல்கின்றனர். வழியில் காவல்துறையினர் வழிமறித்தாலும், விவசாய தொழிலாளர்கள் போல உள்ள திருடர்கள், விற்பனைக்காக மார்க்கெட்டிற்கு கொண்டு செல்வதாக கூறிவிடுவதால் போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால், ஒவ்வொரு நாளும் 5 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தனது தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார் திருடப்பட்டதால் திருடர்களை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தி இருந்தார். நேற்று முன்தினம் மதியம் பைக்கில் வந்த இருவர் வாழைத்தார்களை வெட்டி எடுத்துச்செல்ல முயற்சிப்பதை பார்த்த ராஜேந்திரன், திருடர்களை பிடிக்க தோட்டத்திற்கு சென்றார். ராஜேந்திரன் வருவதை பார்த்த வாழைத்தார் திருடர்கள், வெட்டிய வாழைத்தார்களை அங்கேயே வீசி விட்டு தப்பியோடினர். இதற்கிடையே வாழைத்தார் திருடர்களை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் வாழைத்தார் திருட வந்தவர்கள் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை இரவில் மட்டுமே வாழைத்தார் திருடப்பட்ட நிலையில் தற்போது பகலிலேயே வாழைத்தார் திருட்டு விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
செய்திகள்
வாழைத்தார் திருட வந்த 2 பேர்தலை தெறிக்க ஓட்டம்!
🕒 31 அக்., 2026, 12:04 PM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கோபி அருகே வாழைத்தார் திருட வந்த 2 பேர் தலைதெறிக்க ஓட்டம்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
