Settings

முகப்பு/செய்திகள்/பன்றிகளின் புகலிடமாக மாறும் ஒத்தக்கடை நரசிங்கம் சாலை
செய்திகள்

பன்றிகளின் புகலிடமாக மாறும் ஒத்தக்கடை நரசிங்கம் சாலை

🕒 31 அக்., 2026, 11:43 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பன்றிகளின் புகலிடமாக மாறும் ஒத்தக்கடை நரசிங்கம் சாலை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஒத்தக்கடை நரசிங்கம் சாலையில் மாரியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் தொடர்ந்து கொட்டப்படும் குப்பைகளால் அப்பகுதி சுகாதாரமற்ற இடமாக மாறி வருகிறது. குப்பைகளும், தேங்கிக் கிடக்கும் கழிவுகளும் அகற்றப்படாத நிலையில், அவற்றை உண்பதற்காக மாடுகள், நாய்கள் மட்டுமின்றி தற்போது பன்றிகளும் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கியுள்ளன. ‎

‎‎மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையோரத்தில் நிலவும் இந்த அவலநிலை பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

சாலையில் குறுக்கிடும் கால்நடைகளாலும் பன்றிகளாலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும், குப்பைகள் தேங்கிக் கிடப்பதால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரிக்கிறது.எனவே உடனடி நடவடிக்கை தேவை.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔