*கரூரில் தீபாவளி கடைகளுக்கு பந்தல் அமைத்து தருவதாக சிறு வியாபாரிகளிடம் ரூ.3,500 அடாவடி வசூல்! மாநகராட்சி அனுமதி இல்லாமல் பந்தல் அமைப்பதாகப் புகார்!* தீபாவளி பண்டிகை... வியாபாரிகளுக்கு வருமானம் தர வேண்டிய நேரத்தில், கடை அமைக்கவே ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் கரூரில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது! கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே தற்காலிகக் கடைகள் அமைக்க 10க்கு 10 அடி அளவிலான ஒரு கடைக்கு 3,500 ரூபாய் வசூலிக்கப்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் மாநகராட்சி ஜவஹர் பஜார் மற்றும் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்காலிகக் கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள வியாபாரிகள், ஜவுளி, பட்டாசு, கவரிங் நகைகள், காலணிகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தகரக் கொட்டகைகள் அமைக்கப்பட்டு, வியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. மாநகராட்சி நிர்வாகத்திடம் எந்த வித முன் அனுமதியும் பெறாமல் வியாபாரிகளிடம் தலா 3,500 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும், கூடுதல் இடத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தகரக் கொட்டகை வேண்டாம் என்று கூறினாலும், கட்டாயம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுவதாகவும், இல்லையெனில் கடை போடக்கூடாது என்று அடாவடியில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுகின்றனர். இந்த வசூல் நடவடிக்கையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் ஈடுபடுவதாகவும் வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். கடைகள் அமைக்க மாநகராட்சி சார்பில் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தரைக் கடைகளுக்கு பந்தல் அமைக்கும் பணிகளை செய்து வரும் ராஜவேல் என்பவர் அரசு அனுமதி பெற்று தான் வேலை நடைபெறுகிறது என்று தெரிவித்தார். ஆனால், அவரிடம் மாநகராட்சி சார்பில் எந்தவித அனுமதி கடிதமும் வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. தரைக்கடைகளுக்கு பந்தல் அமைக்க மாநகராட்சி அனுமதியே இல்லாத நிலையில், கடைகள் அமைத்து கட்டணம் வசூலிப்பது யார்? வியாபாரிகளின் புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்று தற்போது கேள்வி எழுந்துள்ளது.
செய்திகள்
கரூரில் மாநகராட்சி அனுமதியின்றி தீபாவளி கடை பந்தல் அமைத்து பணம் வசூலிப்பது யார்?
🕒 1 நவ., 2026, 10:28 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):
✨
AI Highlights
- •*கரூரில் தீபாவளி கடைகளுக்கு பந்தல் அமைத்து தருவதாக சிறு வியாபாரிகளிடம் ரூ.3,500 அடாவடி வசூல்! மாநகராட்சி அனுமதி இல்லாமல் பந்தல் அமைப்பதாகப் புகார்!*
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech



