அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டம் மாநில தலைவர் தில்லை கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் அளித்த பேட்டியில் கிராம உதவியாளருக்கு காலம் முறை ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும். ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றாத பட்சத்தில் சென்னை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் முன்பாக அடுத்த மாதம் 3 ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செய்திகள்
காலமுறை ஊதியம் கோரி சென்னையில் கிராம உதவியாளர்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு!
🕒 31 அக்., 2026, 11:35 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
