Settings

முகப்பு/செய்திகள்/ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக பலனை அனுபவிப்பார்கள் - அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை
செய்திகள்

ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக பலனை அனுபவிப்பார்கள் - அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை

🕒 30 அக்., 2026, 04:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக பலனை அனுபவிப்பார்கள் - அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு திருச்சி சிலைக்கு அமைச்சர் ரமேஷ் மரியாதை செலுத்தினார். ஊழல் செய்தவர்கள் நிச்சயமாக பலனை அனுபவிப்பார்கள் என அவர் எச்சரித்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலைக்கு, அவரது 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தலைவர்களுக்கு தொடர்ந்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இதனை வைத்து சிலர் அரசியல் செய்ய நினைக்கின்றனர். ஆனால், தேவர் ஐயாவை பின்பற்றுபவர்கள் அனைவரும் தற்போதைய அரசின் நல்லாட்சியை பாராட்டி வருகின்றனர்" என்றார்.

மேலும், "மக்கள் பணத்தை சுரண்டியவர்கள் மீது மட்டுமே சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது; தவறு செய்தவர்கள் நிச்சயமாக அதற்கான பலனை அனுபவிப்பார்கள்" என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔