Settings

முகப்பு/செய்திகள்/புதுக்கோட்டை முதல்வர் வருகையொட்டி இரண்டாவது தற்காலிகப் பேருந்து நிலையம்
செய்திகள்

புதுக்கோட்டை முதல்வர் வருகையொட்டி இரண்டாவது தற்காலிகப் பேருந்து நிலையம்

🕒 30 அக்., 2026, 11:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
புதுக்கோட்டை முதல்வர் வருகையொட்டி இரண்டாவது தற்காலிகப் பேருந்து நிலையம்
✨

AI Highlights

  • •புதுக்கோட்டை முதல்வர் வருகையொட்டி இரண்டாவது தற்காலிகப் பேருந்து நிலையம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியின் போது சில பழுதுகளை காரணம் காட்டி பழைய கட்டிடங்களை அப்படியே எடுத்து விட்டு மீண்டும் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு தொடர்ந்து பணிகள் நடைபெற்று வந்தன. 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தை நவம்பர் இரண்டாம் தேதி தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைக்கிறார். இந்தப் பேருந்து நிலையம் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது தென்புறம் தற்காலிக பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு இன்று வரை அதில் தான் தற்காலிக பேருந்து நிலையமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதல்வர் வருகையின் போது பேருந்துகள் போக்குவரத்திற்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்பதற்காக பேருந்து நிலையத்திற்கும் மேல்புறம் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு இருந்த இடத்தை ஒரு நாள் மட்டும் இரண்டாவது தற்காலிக பேருந்து நிலையமாக அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து அந்த இடத்தை சுத்தம் செய்து வருகிறார்கள். இந்த இரண்டாவது தற்காலிக பேருந்து நிலையம் ஆனது அன்று ஒரு நாள் மட்டும் செயல்படும் என்றும் தெரிய வருகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔