அரியலூர் - ஜெயங்கொண்டம் அருகே பாமாயில் மரம் பற்றி எரிந்ததால் பரபரப்பு, தீயணைப்புத் துறையினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கீழக்குடியிருப்பு பகுதியில் ஜெயராமன் என்பவரது பாமாயில் வயலில் திடீரென பாமாயில் மரம் ஒன்று உச்சியில் தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்த போது முடியாததால் இது குறித்து ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பாமாயில் உச்சி மரத்தில் பற்றிய தீயை தண்ணீர் பீச்சி அடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து விசாரித்த போது அருகில் இருந்த வயல் உரிமையாளர் தனது வயல்வெளியில் உள்ள கருவேல மரங்களை எரித்தபோது எதிர்பாராத விதமாக பாமாயில் சோலையில் பற்றிய தீ உச்சி மரத்திற்கு சென்று மல மலவென தீ எங்கும் பற்றி எரியத் தொடங்கியது. தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

