Settings

முகப்பு/செய்திகள்/தீபாவளி விழிப்புணர்வு: நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தீயணைப்புத்துறை நேரடி செயல்விளக்கம்
செய்திகள்

தீபாவளி விழிப்புணர்வு: நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தீயணைப்புத்துறை நேரடி செயல்விளக்கம்

🕒 4 நவ., 2026, 09:07 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபாவளி விழிப்புணர்வு: நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தீயணைப்புத்துறை நேரடி செயல்விளக்கம் - படம் 1
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தீபாவளிப் பட்டாசு பாதுகாப்பு மற்றும் தீ விபத்து தடுப்பு குறித்த செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தீ விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை தீயணைப்புத்துறை சார்பில் கல்வி நிறுவனங்களில் தீபாவளி விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் பி. லதா தலைமை தாங்கினார். இதில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்து கொண்டு, பட்டாசுகளை எவ்வாறு பாதுகாப்பாக வெடிப்பது, ஆடைகளில் தீப்பற்றினால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் எதிர்பாராத விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து விளக்கமளித்தனர். மேலும், சிலிண்டர் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் முதலுதவி சிகிச்சைகள் குறித்து நேரடி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔