விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே குடும்பப் பிரச்சினை காரணமாக 79 வயதான மூதாட்டி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சுழி அருகே உள்ள பொம்மகோட்டை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மனைவி சுப்புலட்சுமி (79). இவர், தனது மகன் குருபாலன் மற்றும் மருமகள் துளசி ஆகியோருடன் அதே கிராமத்தில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பொம்மகோட்டை பகுதியில் மயானம் செல்லும் சாலையில் மூதாட்டியின் சடலம் தீப்பிடித்து எரிந்த நிலையில் கிடப்பதாக எம்.ரெட்டியபட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலில் பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இறந்தவர் பொம்மகோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பதும், குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் தனது உடலில் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியாது . இச்சம்பவம் குறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

