திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாய குறிகள் கூட்டம் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த விவசாய குறைதீர் கூட்ட தொடக்கத்தில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 11 டெல்டா மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட நெல்பயிற்சிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30,000 நிவாரணம் வழங்க வேண்டும், கூட்டுறவு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தேர்தல் கால வாக்குறுதி கூறியவற்றை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் முன்பாக விவசாயிகள் கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
செய்திகள்
டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
🕒 29 அக்., 2026, 06:54 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முன்பு விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
