பேருந்துகளில் அதிகம் சப்தம் எழுப்பும் ஹாரன்கள் ! அதிரடி ரைடு நடத்தி அட்வைஸ் செய்த ரியல் சிங்கப்பெண் ட்ராபிக் இன்ஸ்பெக்டர் கரூர் மாநகரத்தின் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்கள் உபயோகப்படுத்தப் படுகிறதா என கரூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கோகிலா,
அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஹாரன்களையும் இவரே ஆபரேட் பண்ணி இது என்ன சத்தம், இது வைப்பதனால் எத்தனை பேர் பாதிக்கப்படுகின்றார்கள் என தெரியுமா?
கர்ப்பிணி பெண்கள் மற்றும் மாரடைப்பு சிகிச்சை பெற்று வருபவர்கள் இந்த ஹாரன்களால் மிகுந்த இன்னல்கள் அனுபவிக்கின்றனர். ப்ளீஸ் திருந்துங்க என்ற அட்வைஸ் சொல்லை ஒரு பேருந்துக்கு ரூபாய் 10,000 வீதம் 15 பேருந்துகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி ஆய்வு மேற்கொண்டார். மேலும் இவரது அதிரடி ஆய்வு ரியல் சிங்கப்பெண் ஆக்சன் இல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது



