Settings

முகப்பு/செய்திகள்/*விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நள்ளிரவில் கொடூரம்- 82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 பவுன் நகை கொள்ளை!*
செய்திகள்

*விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நள்ளிரவில் கொடூரம்- 82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 பவுன் நகை கொள்ளை!*

🕒 1 நவ., 2026, 07:04 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
*விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நள்ளிரவில் கொடூரம்- 82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 பவுன் நகை கொள்ளை!*

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 3 படங்கள்):

✨

AI Highlights

  • •*விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நள்ளிரவில் கொடூரம்- 82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 பவுன் நகை கொள்ளை!*

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

*விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நள்ளிரவில் கொடூரம்- 82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 பவுன் நகை கொள்ளை!* விருதுநகர் மாவட்டம், அ.முக்குளம் அருகே எம்.பறையன்குளம் பாண்டியன்கோட்டை கிராமத்தில், நேற்று நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 82 வயது மூதாட்டியின் காதை அறுத்து 11 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.பறையன்குளம் பாண்டியன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பாயி அம்மாள் (வயது 82). இவர் நேற்று இரவு வழக்கம்போல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 12 :00 மணி அளவில், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், மூதாட்டி அணிந்திருந்த நகைகளைப் பறிக்க முயன்றுள்ளனர். அப்போது மூதாட்டி கூச்சலிடவே, கொடூர மனம்படைத்த அக்கிரமிப்பாளர்கள் அவர் காதில் அணிந்திருந்த 7 பவுன் 'சவரி' நகை மற்றும் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி என மொத்தம் 11 பவுன் தங்க நகைகளை காதோடு சேர்த்து அறுத்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் நடந்த எம்.பறையன்குளம் பாண்டியன்கோட்டை கிராமத்தின் ஒரு பகுதி சிவகங்கை மாவட்ட எல்லையிலும், மறு பகுதி விருதுநகர் மாவட்ட எல்லையிலும் அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டியின் வீடு விருதுநகர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்திருந்ததால், தகவல் அறிந்த அ.முக்குளம் காவல் நிலையப் போலீசார் நேற்று நள்ளிரவிலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்களின் தடயங்களைச் சேகரித்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். காதில் பலத்த காயமடைந்த மூதாட்டி முத்துக்கருப்பாயி உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக விருதுநகர் மாவட்டம் மற்றும் இதன் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் பீதியிலும் அச்சத்திலும் ஆழ்ந்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அப்பகுதியில் காவல்துறை ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔