Settings

முகப்பு/செய்திகள்/திருப்பத்தூர்: மாற்றுத்திறனாளி பெண்ணிடம் அத்துமீறல் - வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
செய்திகள்

திருப்பத்தூர்: மாற்றுத்திறனாளி பெண்ணிடம் அத்துமீறல் - வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

🕒 31 அக்., 2026, 01:56 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருப்பத்தூர்: மாற்றுத்திறனாளி பெண்ணிடம் அத்துமீறல் - வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
✨

AI Highlights

  • •திருப்பத்தூர் மாவட்டம்
  • •*திருப்பத்தூர் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது*

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம். திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண்ணை மீட்டூர் அடுத்த நாச்சியார்குப்பம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் ரஞ்சித்குமார் (30) என்பவர் குடிபோதையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கடந்த 28.09.2026 அன்று தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து‌ அவரது உறவினர்கள் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்தில், இதுகுறித்து புகார் அளித்த நிலையில், புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரஞ்சித்குமார் மீட்டூர் பகுதியில் பானி பூரி வியாபாரம் செய்து வருவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரஞ்சித் குமார் மீது வழக்கு பதிந்து கடந்த 29.09.26 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் அடிப்படையில் ரஞ்சித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அணில் வாகரே பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் நல்லசிவம் உத்தரவின் பேரில் ரஞ்சித்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்‌.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔