நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பெரியதொட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுசீலா (55). இவர் அப்பகுதியில் விவசாய நிலத்துடன் கூடிய சுமார் 90 அடி ஆழமுள்ள விவசாயக் கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் சுமார் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் உள்ளது. இவர் விவசாயத்துடன் ஆடு, மாடுகளையும் வளர்த்து வருகிறார். இந்நிலையில், விவசாயக் கிணறு அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த இவரது எருமை மாடு எதிர்பாராத விதமாக சுமார் 90 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கிரேன் உதவியுடன் கிணற்றில் விழுந்த எருமை மாட்டை உயிருடன் பத்திரமாக மீட்டனர். 90 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்ட சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்திகள்
ராசிபுரம்: 90 அடி கிணற்றில் தவறி விழுந்த எருமை மாடு மீட்பு!
🕒 31 அக்., 2026, 01:02 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):
✨
AI Highlights
- •ராசிபுரம் அருகே 90 அடி ஆழமுள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த எருமை மாடு – கிரேன் உதவியுடன் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்...
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech

