முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை… ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற மருத்துவர்கள் ஆலோசனை! விழுப்புரம் மாவட்டம், முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் நிதி ஆதரவு பெறும் குழந்தைகளுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. பொது சுகாதாரத்துறை மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மூலம் இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஜோஸ் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், மருத்துவர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட மருத்துவர்கள் பங்கேற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். மேலும், குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதுகாப்பது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது உள்ளிட்டவை குறித்து மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. இந்த முகாமிற்கான ஒருங்கிணைப்பு பணிகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் புறத்தொடர்புப் பணியாளர் சதீஷ் பிரேம்குமார் மேற்கொண்டார். இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆதரவாளர்கள் மற்றும் மருத்துவ முகாம் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை…
🕒 29 அக்., 2026, 02:12 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨
AI Highlights
- •முகையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்
- •குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனை…
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
