Settings

முகப்பு/செய்திகள்/மின்னேற்றக் கட்டமைப்பை மேம்படுத்த களமிறங்கிய மாநகராட்சி!
செய்திகள்

மின்னேற்றக் கட்டமைப்பை மேம்படுத்த களமிறங்கிய மாநகராட்சி!

🕒 28 அக்., 2026, 06:45 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மின்னேற்றக் கட்டமைப்பை மேம்படுத்த களமிறங்கிய மாநகராட்சி!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •கோயம்புத்தூர் மாநகரில் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், பொது மின்னேற்றக் கட்டமைப்பை மேம்படுத்தவும் மாநகராட்சி மற்றும் Guidance Tamil Nadu இணைந்து பயிலரங்கம் நடத்தின.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோயம்புத்தூர் மாநகரில் மின்சார வாகனப் (EV) பயன்பாட்டை விரைவுபடுத்துவது மற்றும் நம்பகமான பொது மின்னேற்றக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC) மற்றும் Guidance Tamil Nadu இணைந்து ஒருநாள் பயிலரங்கத்தை நடத்தின.

ITDP India அமைப்பின் தொழில்நுட்ப ஆதரவுடன் நடைபெற்ற இப்பயிலரங்கம், கோயம்புத்தூர் பந்தய சாலை பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாகனப் போக்குவரத்துக் கழகம் (TNSTC), மண்டலப் போக்குவரத்து அலுவலகம் (RTO), தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB), கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கழகம் (CIT) மற்றும் போக்குவரத்துக் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

மேலும், மாநகராட்சி துணை ஆணையாளர் ர. சரஸ்வதி, உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) யோகசித்ரா மற்றும் உதவிப் பொறியாளர்கள் இந்நிகழ்வில் உடனிருந்தனர்.

கோய்பத்தூர் மாநகரில் மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும், பொதுமக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய வகையில் நம்பகமான மின்னேற்ற நிலையங்களை அமைப்பதற்கும் அவசியமான துறைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதே இப்பயிலரங்கின் முக்கிய நோக்கமாக இருந்தது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔