தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சத்யா நகரில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64-ஆவது குருபூஜை விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.நகரச் செயலாளர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. என்.கே. பெருமாள் கலந்து கொண்டு, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அதிமுக ஒன்றியச் செயலாளர் பால்ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி ஆனந்த், கட்சி நிர்வாகிகள் சண்முகச்சாமி, ஆசைத்தம்பி, மகளிர் அணி சாந்தி, ஆறுமுகத்தாய் உட்படக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
செய்திகள்
விளாத்திகுளத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா:
🕒 30 அக்., 2026, 10:02 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •விளாத்திகுளத்தில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா:
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
