Settings

முகப்பு/செய்திகள்/காவலர்களை ஏமாற்றி கைதி தப்பி ஓட்டம் - போலீஸ்‌ வலைவீச்சு
செய்திகள்

காவலர்களை ஏமாற்றி கைதி தப்பி ஓட்டம் - போலீஸ்‌ வலைவீச்சு

🕒 31 அக்., 2026, 10:41 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காவலர்களை ஏமாற்றி கைதி தப்பி ஓட்டம் - போலீஸ்‌ வலைவீச்சு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •கோவையில் காவலர்களை ஏமாற்றி கைதி தப்பி ஓட்டம் -போலீஸ்‌ வலைவீச்சு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை மத்திய சிறையில் காவலர்களை ஏமாற்றிவிட்டு கைதி தப்பியோட்டம். ஈரோடு பவானி அன்னூர் பகுதியை சேர்ந்த ராகவன் என்கிற கோழிக்காரன்(25) அக்டோபர் 30 கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அக்டோபர் 30 நள்ளிரவில் கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறை அலுவல்களுக்காக கைவிலங்கு கழற்றப்பட்ட நிலையில் பாதுகாப்புக்கு வந்த காவலர்களை தாக்கி விட்டு கைதி தப்பியோட்டம். இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதுகாப்புக்கு வந்த காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, உயர் அதிகாரிகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 20க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔