Settings

முகப்பு/செய்திகள்/காதல் விவகாரத்தில் தாக்குதல்: தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் பலி!
செய்திகள்

காதல் விவகாரத்தில் தாக்குதல்: தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் பலி!

🕒 29 அக்., 2026, 06:03 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காதல் விவகாரத்தில் தாக்குதல்: தாய் உயிரிழந்த நிலையில், தந்தையும் பலி!
✨

AI Highlights

  • •சாத்தான்குளம் அருகே காதல் விவகாரத்தில் கொடூரத் தாக்குதல்: மனைவியைத் தொடர்ந்து கணவரும் பலி! இரட்டை கொலையாக மாறியதால் பரபரப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே காதல் விவகாரத்தில் குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூர அரிவாள் வெட்டுத் தாக்குதலில், தாய் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தையும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் இச்சம்பவம் இரட்டை கொலையாக மாறியிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி விஜிலா (48). இவர்களது மகன் பிளசெட் ராஜா. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் விவகாரத்தில் ஒரு கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீடு புகுந்து முத்துகிருஷ்ணனின் குடும்பத்தினர் மீது கண்மூடித்தனமாகப் சரமாரி வெட்டி தாக்குதல் நடத்தியது இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த மேரி விஜிலா (48) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தலை மற்றும் உடலில் பலத்த வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பிளசெட் ராஜா ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முத்துகிருஷ்ணனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், உடலில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில்,நேற்று இரவு சிகிச்சை பலனின்றி முத்துகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த அவரது மகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி மேரி விஜிலா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது கணவர் முத்துகிருஷ்ணனும் உயிரிழந்ததால் இந்த வழக்கு இரட்டை கொலை வழக்காக மாறியுள்ளது. தாயைத் தொடர்ந்து தந்தையையும் பறிகொடுத்து அக்குடும்பமே நிலைகுலைந்து போயுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔