திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில், ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.நல்லசிவன் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் நா.திருப்பதி ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, விளையாட்டு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டது.
இதனிடையே, ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது கோரிக்கை மனுவை அளித்தார். இந்த நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஜெயகுமாரி, திருப்பத்தூர் வட்டாட்சியர் திருமலை மற்றும் அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

