Settings

முகப்பு/செய்திகள்/திருச்சி மாநகராட்சியில் புதிய அடர்வன குறுங்காடு திட்டம் - 7,500 மரக்கன்றுகள் நடும் பணி ஆரம்பம்!
செய்திகள்

திருச்சி மாநகராட்சியில் புதிய அடர்வன குறுங்காடு திட்டம் - 7,500 மரக்கன்றுகள் நடும் பணி ஆரம்பம்!

🕒 29 அக்., 2026, 09:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திருச்சி மாநகராட்சியில்  புதிய அடர்வன  குறுங்காடு திட்டம் -  7,500 மரக்கன்றுகள் நடும் பணி ஆரம்பம்!
✨

AI Highlights

  • •திருச்சி மாநகராட்சியில் புதிய அடர்வன குறுங்காடு திட்டம் - 7,500 மரக்கன்றுகள் நடும் பணி ஆரம்பம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருச்சி மாநகராட்சி மற்றும் தனியார் ஜவுளி நிறுவனம் இணைந்து மாநகராட்சி மண்டலம் 5, வார்டு எண் 8-க்குட்பட்ட கணபதி நகர் மற்றும் வின்ஸ் அன்பு அவென்யூ ஆகிய பகுதிகளில் புதிய குறுங்காடு அமைக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. சுமார் 2,506 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட மாநகராட்சி பூங்காவில் 7,500 மரக்கன்றுகளை நடும் இந்த சிறப்பு அடர்வனக் குறுங்காடு திட்டத்தை, மாநகராட்சி ஆணையர் பொன்மணி இன்று தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த நிழல் தரும் மரங்கள், பூக்கும் மரங்கள் மற்றும் பழ மரங்கள் என மொத்தம் 26 வகையான மரக்கன்றுகள் அடர்த்தியாக நடவு செய்யப்பட உள்ளன. நடவு செய்யப்படும் அனைத்து மரக்கன்றுகளுக்கும் சொட்டுநீர்ப் பாசன வசதி, பாதுகாப்பிற்கான வேலி அமைப்பு மற்றும் முறையான பராமரிப்புப் பணிகள் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன. திருச்சி மாநகராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணவும், பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் அடர்வனக் குறுங்காடு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், அகிலாண்டேஸ்வரி நகர், சஞ்சீவி நகர், வின்ஸ் அவென்யூ, கணபதி நகர், கருமண்டபம் காவிரி நகர் உள்ளிட்ட 9 இடங்களில் இத்தகைய அடர்வனக் குறுங்காடுகள் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக பராமரிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔