Settings

முகப்பு/செய்திகள்/இலங்கை மீனவர்களின் குண்டு வீச்சு எச்சரிப்புக்கு தமிழக விசைப்படகுகளே காரணம்: என்.ஜே.போஸ் பேட்டி
செய்திகள்

இலங்கை மீனவர்களின் குண்டு வீச்சு எச்சரிப்புக்கு தமிழக விசைப்படகுகளே காரணம்: என்.ஜே.போஸ் பேட்டி

🕒 31 அக்., 2026, 08:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
இலங்கை மீனவர்களின் குண்டு வீச்சு எச்சரிப்புக்கு தமிழக விசைப்படகுகளே காரணம்: என்.ஜே.போஸ் பேட்டி
✨

AI Highlights

  • •இலங்கை மீனவர்களின் பெட்ரோல் குண்டு வீச்சு எச்சரிப்புக்கு தமிழக விசைப்படகுகளின் அத்துமீறலே காரணம் என்று விசைப்படகு மீனவ சங்கத் தலைவர் என்.ஜே.போஸ் தெரிவித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் விசைப்படகுகளே இலங்கை மீனவர்களின் பெட்ரோல் குண்டு வீச்சு எச்சரிப்புக்கு முக்கிய காரணம் என தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு விசைப்படகு மாநில பொதுச்செயலாளர் என்.ஜே.போஸ் கூறுகையில், இலங்கை மீனவர்களின் தொழில் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதே அவர்களின் தற்போதைய கொந்தளிப்புக்கு காரணம் என்றார். குறிப்பாக, ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி இயக்கப்படும் அதிவேக விசைப்படகுகள் மற்றும் காரைக்காலில் இருந்து எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி இலங்கை பகுதிக்குச் சென்று மீன்வளத்தை அழிக்கும் செயல்களே இந்தச் சூழலை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சிறுதொழில் செய்யும் மீனவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், காலப்போக்கில் ஒட்டுமொத்த மீன்பிடித் தொழிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்தார். ராமேஸ்வரத்தில் உரிமமின்றியும், அதிக குதிரைத்திறன் கொண்ட பைபர் படகுகளும் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்தாலும், அரசு தரப்பில் சிலரின் தலையீட்டால் அத்தகைய படகுகள் மீண்டும் இயக்கப்படுவதற்கு அனுமதி வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

பெரிய விசைப்படகு உரிமையாளர்கள் சிறுதொழில் மீனவர்களின் வளத்தை அழிப்பதாகத் தெரிவித்த அவர், இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறிச் செல்லும் காரைக்கால் பகுதி மீனவர்கள்தான் இதற்கு முக்கியக் காரணம் என்றார். அவர்கள் இலங்கை கடல்வளத்தை அழிப்பதால் ஆத்திரமடைந்துள்ள இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசுவதாக எச்சரித்து ஆடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக என்.ஜே.போஸ் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால், கடலையும் மீனவர்களின் தொழிலையும் காப்பாற்ற முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔