Settings

முகப்பு/செய்திகள்/தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க திருச்சி என்.எஸ்.பி சாலையில் புறக்காவல் நிலையம் திறப்பு!
செய்திகள்

தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க திருச்சி என்.எஸ்.பி சாலையில் புறக்காவல் நிலையம் திறப்பு!

🕒 31 அக்., 2026, 09:07 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க திருச்சி என்.எஸ்.பி சாலையில் புறக்காவல் நிலையம் திறப்பு!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •தீபாவளி கூட்ட நெரிசலை கண்காணிக்க திருச்சி என்.எஸ்.பி சாலையில் புறக்காவல் நிலையம் திறப்பு!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகளை வாங்க வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தற்காலிக காவல் உதவி மையம் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறை என்.எஸ்.பி சாலையில் உள்ள தெப்பக்குளத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டது. திருச்சி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா காவல் உதவி மையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநகர காவல் துறை ஆணையர் ரூபேஷ் குமார் மீனா:- பொதுமக்கள் அதிகம் கூடும் சத்திரம் பேருந்து நிலையம், பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் 24 நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதிகளில் குற்றங்களை தடுக்கவும், சந்தேகிக்கும் நபர்களை கண்காணிக்கவும் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் மலைக்கோட்டை என்.எஸ்.பி ரோடு, சிங்காரத்தோப்பு, ஜோசப் காலேஜ் உள்ளிட்ட 7 இடங்களில் அமைக்கப் பட்டுள்ளது. நகரின் மிக முக்கியமான பகுதிகளில் 152 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்ற நடவடிக்கைகள் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவு சுழல் கேமராக்கள் மற்றும் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக திருட்டு நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கேமராக்களும் புற காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மானிட்டர்கள் மூலமாகவும் நாள் முழுவதும் கண்காணிக்கப்படும். மிக முக்கியமாக போக்குவரத்து நெரிசலையை தவிர்ப்பதற்காக தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, சத்திரம் பேருந்து நிலையம், சூப்பர் பஜார் பார்க்கிங், மங்கள் & மங்கள் பார்க்கிங், உள்ளிட்ட 15 இடங்களில் இருச்சகர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு என மொத்தம் 200 காவல் துறையில் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். திருடர்களின் கைவரிசையை தடுக்கும் பொருட்டு கூடுதலாக கண்காணிப்பு உயர் கோபுரங்களை அமைப்பதோடு ஏற்கனவே குற்ற பதிவேட்டில் உள்ள குற்றவாளிகளின் பட்டியலை வைத்து தொடர்ந்து கண் காணிக்கப்படும் என தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔