Settings

முகப்பு/செய்திகள்/நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: பாலித்தீன் பைகள் அச்சிடும் தொழிற்சாலை தீக்கிரை!
செய்திகள்

நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: பாலித்தீன் பைகள் அச்சிடும் தொழிற்சாலை தீக்கிரை!

🕒 15 செப்., 2026, 09:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: பாலித்தீன் பைகள் அச்சிடும் தொழிற்சாலை தீக்கிரை! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •*விருதுநகரில் பாலித்தீன் பைகளில் அச்சடிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து: பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பல்!*

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் சிவந்திபுரம் பகுதியில் பாலித்தீன் பைகளில் அச்சிடும் தொழிற்சாலையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் தீக்கிரையாகின.

விருதுநகர் முத்துராமன்பட்டியைச் சேர்ந்த பொன் கணேஷ் என்பவர் சிவந்திபுரம் பகுதியில் பாலித்தீன் பைகளுக்கு அச்சிடும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இந்நிலையில், நள்ளிரவில் தொழிற்சாலையில் திடீரென மின்கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தீ, தொழிற்சாலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் மூலப்பொருட்களில் வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. தொழிற்சாலையில் இருந்து கரும்புகை வெளியேறியதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதுநகர் தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் மற்றும் மூலப்பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்செய்திகள்

மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்

SRIDHAR🕒 நவ. 15
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் ஆலோசனைசெய்திகள்

மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் ஆலோசனை

Arivazhagan🕒 நவ. 15
வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைதுசெய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது

Arivazhagan🕒 நவ. 15
அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்ஆன்மீகம்

அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்

D Velmurugan🕒 நவ. 15
பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்ஆன்மீகம்

பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்

SRIDHAR🕒 நவ. 15
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!விவசாயம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!

D Velmurugan🕒 நவ. 15
அரியலூரில் திரண்ட இளைஞர்கள்: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

அரியலூரில் திரண்ட இளைஞர்கள்: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

D Velmurugan🕒 நவ. 15
9 மணி நேர விசாரணைக்கு பின் மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!தமிழ்நாடு

9 மணி நேர விசாரணைக்கு பின் மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

Vijay🕒 நவ. 15
TNO வாட்ஸ்அப் சானல் ➔