Settings

முகப்பு/அரசியல்/செந்தில்பாலாஜி தலைமையில் கரூரில் திரண்ட 300+ திமுகவினர்: பரபரப்பான கண்டன ஆர்ப்பாட்டம்!
அரசியல்

செந்தில்பாலாஜி தலைமையில் கரூரில் திரண்ட 300+ திமுகவினர்: பரபரப்பான கண்டன ஆர்ப்பாட்டம்!

🕒 31 அக்., 2026, 08:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செந்தில்பாலாஜி தலைமையில் கரூரில் திரண்ட 300+ திமுகவினர்: பரபரப்பான கண்டன ஆர்ப்பாட்டம்!

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 4 படங்கள்):

✨

AI Highlights

  • •கரூரில் தலைமை தபால் நிலையம் முன்பு திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கரூரில் திமுக மகளிரணி கண்டன ஆர்ப்பாட்டம் – தவெக அரசைக் கண்டித்து 300- மேற்பட்டோர் முழக்கம் - முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி பங்கேற்பு கரூர் தலைமை தபால் நிலையம் முன்பாக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் நந்தினிதேவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான வி. செந்தில்பாலாஜி பங்கேற்று கண்டன கோசம் எழுப்பினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, சூரியனூர் சந்திரன், கழக நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், மாநில சட்டத்துறை இணைச் செயலாளர் மணிராஜ், கழக நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி, தலைமை கழகப் பேச்சாளர்கள் நிரஞ்சனா செந்தில்குமார், கவிதா கல்யாணசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-கும் மேற்பட்டோர் பங்கேற்று, தமிழக வெற்றிக் கழக அரசைக் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் கண்டித்து கையில் பதாகை ஏந்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔