Settings

முகப்பு/அரசியல்/தவெக எம்.எல்.ஏ எஸ்.பி. செல்வம் பேட்டி!
அரசியல்

தவெக எம்.எல்.ஏ எஸ்.பி. செல்வம் பேட்டி!

🕒 31 அக்., 2026, 09:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தவெக எம்.எல்.ஏ எஸ்.பி. செல்வம் பேட்டி!
✨

AI Highlights

  • •விருதுநகரில் தவெக எம்.எல்.ஏ எஸ்.பி. செல்வம் பேட்டி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகரில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் செய்தியாளர்களி சந்தித்து பேசிய அவர் விலைவாசி உயர்வைக் கண்டித்துக் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்த கேள்விக்கு: மாநில அரசு தன் விருப்பத்திற்கு விலையை உயர்த்தவில்லை.

கடந்த காலங்களில் நிலவிய மழைப்பற்றாக்குறை காரணமாக விவசாய உற்பத்தி குறைந்துள்ளது. வரத்து குறைந்து தேவைகள் அதிகரிப்பதே விலை உயர்வுக்குக் காரணமாகும். மக்களின் இந்த பாரத்தைக் குறைக்கவே முதலமைச்சர் அவர்கள் மலிவு விலையில் 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும், மானிய விலையில் அரிசியையும் வழங்கி வருகிறார். எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய அவர்: கடந்த 5 ஆண்டுக்கால ஆட்சியில் அவர்களின் நிர்வாகம் எவ்வாறு இருந்தது என்பதை உணர்ந்தே மக்கள் அவர்களுக்குச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

முதலமைச்சர் அவர்கள் சட்டம்-ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறார். நாள்தோறும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை முதலமைச்சரே நேரில் அலுவலகத்திற்கு வந்து மக்கள் பணியாற்றுவது தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக இப்போதுதான் நடக்கிறது.

எதிர்க்கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே அரசைக் குறை கூறி இதுபோன்ற போராட்டங்களை நடத்தி வருகின்றன. அவர்களின் குற்றச்சாட்டுகளில் எந்தவித உண்மையும் இல்லை என தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔