Settings

முகப்பு/அரசியல்/மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது மாநில உரிமைக்காகத்தான்: ஐயுஎம்எல் தலைவர் காதர் மைதீன்
அரசியல்

மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது மாநில உரிமைக்காகத்தான்: ஐயுஎம்எல் தலைவர் காதர் மைதீன்

🕒 31 அக்., 2026, 09:05 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது மாநில உரிமைக்காகத்தான்: ஐயுஎம்எல் தலைவர் காதர் மைதீன்

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •பாஜகவின் கொள்கைகளுக்கு ஆதரவாக இந்த ஆட்சி செயல்படவில்லை என்பதில் முழு நம்பிக்கை உள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் காதர் மைதீன் தெரிவித்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 'இணையதள நண்பர்கள் சந்திப்பு நிகழ்ச்சி' வரும் 14.11.2026 அன்று திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கான லோகோ வெளியீட்டு விழா திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மைதீன் மற்றும் மாநில செயலாளரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேசியத் தலைவர் காதர் மைதீன் கூறுகையில்:- இதயங்களை இணைப்போம் என்ற கருப்பொருளில் இந்த இணையதள நண்பர்கள் சந்திப்பு திருச்சியில் நடத்தப்பட உள்ளது. இதில் 1500-க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளனர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 1948-ஆம் ஆண்டு தேச ஒற்றுமை மற்றும் சமுதாய நல்லிணக்கம் ஆகிய முக்கியக் கொள்கைகளை முன்னிறுத்தித் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் சுதந்திரக் காலம் முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து திமுக கூட்டணியில் பயணித்து வந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கட்சியின் சார்பில் அமைச்சரவையில் இடம் பெற்றது இதுவே முதல் முறை ஆகும். தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் மறைமுக ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு திமுக கூட்டணிக் கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளன. நாங்களும் அந்த ஆதரவை அளித்துள்ளோம். தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு முதன்முறையாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ.100 கோடி பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் கபர்ஸ்தான்களின் மராமத்துப் பணிகளுக்காக 3 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடனாக வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கத் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சிறுவர்கள் தவறு செய்தால், குடும்பத்தினரும் பள்ளி ஆசிரியர்களுமே அவர்களை நல்வழிப்படுத்தி திருத்த வேண்டும். தமிழகத்தில் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்ட இருவருமே மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கொள்கைக்கோ அல்லது அவர்களின் நடவடிக்கைகளுக்கோ ஆதரவாக இந்த ஆட்சி செயல்படவில்லை என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. நடக்கக்கூடிய ஒவ்வொரு சம்பவங்களையும் பார்க்கும் போது மத்திய பாஜக அரசுக்கு, அதன் கொள்கைகளுக்கு எதிரான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. அதே நேரத்தில் மத்திய அரசோடு அரவணைத்து ஒவ்வொரு காரியத்தையும் மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும் என்பது எங்களது நம்பிக்கை. தமிழகத்தின் நன்மைக்காக மத்திய அரசு உடன் இணைந்து செயல்படலாம். கொள்கை எதிரி என்பதால் எதற்கெடுத்தாலும் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔