புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே இன்று திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் அணி நிர்வாகிகளில் ஒருவரான கலைமணி ராஜாத்தி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலை மகளிர் பொறுப்பாளர்களும் மகளிர் தொண்டர்களும் கலந்து கொண்டனர். அனைத்து பொருட்களும் விலை ஏறிவிட்டது என்பதை குறிக்கும் விதமாக கேஸ் சிலிண்டர், காய்கறி மளிகை பொருட்கள் ஆகியவற்றை வைத்து சுற்றி சுற்றி வந்து மகளிர் அணியினர் மாரடித்து ஒப்பாரி வைத்தனர். பின்னர் மேடை ஏறி கண்டனம் முழக்கமிட்டனர். இந்நிகழ்வில் மேலும் முன்னாள் அமைச்சர்கள் ரகுபதி, மெய்ய நாதன், எம் எல் ஏ டாக்டர் முத்துராஜா, முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய பொறுப்புகளில் உள்ள பலரும் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்தியும் பேசினர்.
அரசியல்
விலைவாசி உயர்வை கண்டித்து புதுக்கோட்டையில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.
🕒 31 அக்., 2026, 08:37 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

