Settings

முகப்பு/அரசியல்/கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை
அரசியல்

கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை

🕒 29 அக்., 2026, 05:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கே.என். நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை
✨

AI Highlights

  • •₹.634 கோடி பணி நியமன ஊழல் வழக்கு - திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் மீண்டும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் காலியாக இருந்த 2,538 பணியிடங்களை நிரப்பியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. ஒரு பணியிடத்திற்கு ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை (ED) அளித்த தகவலின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜூன் 5, 2026 அன்று வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக, திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என். நேருவின் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் டிஎஸ்பி ஹேமச்சந்திரா தலைமையிலான அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக, உயர் நீதிமன்றம் தனது மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து கே.என். நேரு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், இந்தச் சோதனை முக்கியத்துவம் பெறுகிறது.

சோதனை நடைபெறும் இடத்திற்கு திமுக தொண்டர்கள் அதிகளவில் குவிந்து வருவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔