Settings

முகப்பு/அரசியல்/விஜய் சீக்கிரம் போய்விடுவார்: ஓ.எஸ்.மணியன் பேட்டி
அரசியல்

விஜய் சீக்கிரம் போய்விடுவார்: ஓ.எஸ்.மணியன் பேட்டி

🕒 29 அக்., 2026, 10:27 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், விஜய் சீக்கிரத்தில் போய்விடுவார் என்றும் அவரது கட்டம் முடிந்துவிட்டதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.எஸ்.மணியன் கூறியதாவது: தவெகவில் புதிதாக இணைபவர்கள் கட்சி நிர்வாகிகளை மட்டுமே சந்தித்து இணையும் நிலையில், மெத்தபெட்டமைன் கடத்தல் விவகாரத்தில் கைதான பூபாலன் மட்டும் விஜயை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டது எப்படி? விஜயை அவருக்கு அறிமுகப்படுத்தியது யார்? கட்சியிலிருந்து நீக்கினால் மட்டும் போதுமா? அவரை தமிழ்நாடு காவல்துறை பிடிக்கவில்லையே, மத்திய அரசுதானே பிடித்துள்ளது. இதுதான் தூய ஆட்சியா? எல்லோரும் காரித்துப்புகிற ஆட்சியாகத்தானே இருக்கிறது என்றார்.

தொடர்ந்து நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், எல்லோரும் வந்துவிட்டு போய்விடுவார்கள், விஜய் சீக்கிரத்தில் போய்விடுவார், அவரது கட்டம் முடிந்துவிட்டது என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சி செய்து 50 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட கட்சி என்றும், சுயலாபத்திற்காகவோ பதவிக்காகவோ கட்சியை விட்டு செல்பவர்கள் ஆற்றில் விடப்பட்ட காகிதக் கப்பல் போன்றவர்கள் என்றும் ஓ.எஸ்.மணியன் குறிப்பிட்டார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔