Settings

முகப்பு/அரசியல்/திமுக அரசை கடுமையாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்! குடியாத்தத்தில் பரபரப்பு பேட்டி
அரசியல்

திமுக அரசை கடுமையாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்! குடியாத்தத்தில் பரபரப்பு பேட்டி

🕒 28 அக்., 2026, 07:20 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திமுக அரசை கடுமையாக விமர்சித்த தமிழிசை சௌந்தரராஜன்! குடியாத்தத்தில் பரபரப்பு பேட்டி

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •தீபாவளிக்குள் ஆவின் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்றும், திமுக அரசு மீது கடும் விமர்சனங்களையும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்வைத்துள்ளார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், தீபாவளிக்குள் ஆவின் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் உள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது "மக்களின் பணத்தை திமுக அரசு எப்படியெல்லாம் சுரண்டியது என்பதற்கு முன்னாள் அமைச்சர் அன்பில் கைது செய்யப்பட்டுள்ளதே உதாரணம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்," என்றார்.

மேலும், தமிழகத்தில் மின் கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், தமிழக மக்களைக் கைவிடாமல் மின் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக போட்டியிட்டு பல இடங்களில் வெற்றி பெறும் என்றும், தமிழகத்தில் மோடியின் ஆட்சி எதிரொலிக்கும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔