Settings

முகப்பு/அரசியல்/திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முக்கியப் பிரமுகர்கள்!
அரசியல்

திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முக்கியப் பிரமுகர்கள்!

🕒 29 அக்., 2026, 11:20 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முக்கியப் பிரமுகர்கள்!
✨

AI Highlights

  • •புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் திமுக நகரச் செயலாளர் மற்றும் மாணவரணி அமைப்பாளர் ஆகியோர் தவெகவில் இணைந்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் திமுக நகரச் செயலாளர் முகமது ரிஷா மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இளைய சூரியன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இவர்களது விலகல் அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னவாசல் பேரூராட்சியில் திமுக நகரச் செயலாளராகப் பொறுப்பு வகித்த அக்பர் அலியின் மகன் முகமது ரிஷா, தற்போதைய நகரச் செயலாளராகச் செயல்பட்டு வந்தார். அதேபோல், அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் சந்திரனின் மகனும், மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளருமான இளைய சூரியன் ஆகிய இருவரும் சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நிலவும் அரசியல் சூழல் மற்றும் கட்சிப் பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்த விலகல் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம், திமுக தலைமை அன்னவாசல் ஒன்றியச் செயலாளர் சந்திரன் மற்றும் விராலிமலை வடக்கு ஒன்றியச் செயலாளர் சத்தியசீலன் ஆகியோரைப் பொறுப்பிலிருந்து விடுவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், முக்கியப் நிர்வாகிகளின் வாரிசுகள் தவெகவில் இணைந்துள்ளது அப்பகுதியில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔