Settings

முகப்பு/அரசியல்/ரூ.1,100 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி
அரசியல்

ரூ.1,100 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி

🕒 31 அக்., 2026, 05:52 AM
⏱️ 2 நிமிடம் வாசிப்பு
ரூ.1,100 கோடியில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் விஜய் பாலாஜி பேட்டி
✨

AI Highlights

  • •ஈரோட்டில் நவம்பர் 3-ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் 4,000 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ.1,100 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாநகராட்சி, வ .உ. சி பூங்கா விளையாட்டு அரங்கில், உலக போலியோ தினத்தினை முன்னிட்டு பள்ளிகளுக்கிடையே ஒரு நாள் நடைபெறும் கைப்பந்து போட்டியினை அமைச்சர் விஜய் பாலாஜி துவக்கி வைத்தார். பின்னர் அமைச்சர் விஜய பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் நவம்பர் 3ம் தேதி ஈரோட்டில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் முதல்வர் சுமார் 12 மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு 1100 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். திமுகவினரால் ஊழல் லட்சம் குற்றச்சாட்டுகளை கூறமுடியாததால் இல்லாத ஒரு பிரச்சனையால் தங்களின் இருப்பை காட்டுக்கொள்ளவேண்டும் என திமுகவினர் இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடத்துகின்றனர்.இது பெரிய விஷயம் அல்ல. தமிழர் நிச்சயம் பிரதமராவார் என குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து குறித்து அவரிடம் தான் கேட்கவேண்டும். கடந்த காலங்களில் இருந்ததுபோன்று மின்வெட்டால் இரட்டிப்பு தற்போது இல்லை.அவ்வப்போது டெக்னிக்கல் தவறுகளால் மின்வெட்டு ஏற்படுகிறது.இதனை எதிர்க்கட்சிகள் பெரிதாக்கும் வகையில் பேசுகின்றனர்.மக்களிடையே இதுபோன்ற பிரச்சனைகள் இல்லை நிம்மதியாக மகிழ்ச்சியாக தமிழக அரசை வாழ்த்தி வருக்கின்றனர்.தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் டெக்னிக்கல் பால்ட் ஏற்படுத்துவது இயல்பு இதனை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குகின்றனர் என குடியரசு துணைத்தலைவர் கோயிலுக்கு வந்தபோது ஏற்பட்ட மின்வெட்டு குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார். 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியது தான் தவெகவின் சாதனை என எடப்பாடி பழனிச்சாமி விமர்சனத்துக்கு "கடந்த ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்துவைத்து சென்றுவிட்டனர்.மக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் வாங்கப்பட்டுள்ளது.வருங்காலங்களில் இவற்றை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்" என பதிலளித்தார். சும்மா முன்னாள் அமைச்சரை கைது செய்யமுடியாது.அன்பில் மகேஷ் செய்த தவறுக்கு ஆதாரம் இருப்பதால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் மீது தவறில்லை என்றால் ஏன் முன்ஜாமின் வாங்க முயற்சிக்கவேண்டும்.முன்ஜாமின் கேட்டதால் தான் கைது நடவடிக்கை.செய்த தவறை மறைப்பதற்காக ஆளுங்கட்சி பழிவாங்குவதாக கூறுகின்றனர்.அவ்வாறு இல்லை.தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பார்கள். கோ-ஆப் டெக்சில் கடந்த காலங்களை விட வருவாய் கூடியுள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிர்ணயித்துள்ள நூறு கோடி இலக்கை அடைந்து விடுவோம். தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாததால் எடப்பாடி பழனிச்சாமி தனி நபர் விமர்சனம்,பெண்களை இழுவுபடுத்துவது தொடர்ந்து வருகின்றனர்.எனவே,அவர்கள் ரீல்ஸ் ஆட்சி நடைபெறுவதாக வாய்க்கு வந்தபடி பேசுகிறார். இடைத்தேர்தலில் சீமான் போட்டியிடுவதால் தவெகவுக்கு நெருக்கடி ஏற்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.இ.பிரகாஷ், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் உட்பட பலர் உள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔