Settings

முகப்பு/ஆன்மீகம்/கல்லறைத் திருநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
ஆன்மீகம்

கல்லறைத் திருநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

🕒 2 நவ., 2026, 12:47 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கல்லறைத் திருநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது - படம் 1
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •வால்பாறையில் கல்லறைத் திருநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வால்பாறையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் கல்லறை திருநாள் சிறப்பு பிரார்த்தனைகளுடன் அனுசரிக்கப்பட்டது.

ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி அனுசரிக்கப்படும் கல்லறை திருநாளை முன்னிட்டு வால்பாறையில் உள்ள தேவாலயங்களின் கல்லறைத் தோட்டங்கள் சுத்தம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இதையொட்டி பொதுமக்கள் தங்களது மறைந்த உறவினர்களின் கல்லறைகளில் மலர் மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். மேலும், மறைந்தவர்களின் ஆன்மா அமைதி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனைகளிலும் பங்கேற்றனர். வால்பாறை ஆர்.சி. கல்லறைத் தோட்டத்தில் திரு இருதய ஆலய பங்குதந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு, தங்களது மறைந்த உறவினர்களை நினைவுகூர்ந்து பிரார்த்தனை செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔