Settings

முகப்பு/ஆன்மீகம்/பாகற்காய், பூசணிக்காயில் தீபமா? மயிலாடுதுறை பழைமை வாய்ந்த பைரவர் கோயிலில் பக்தர்கள் விசேஷ வழிபாடு!
ஆன்மீகம்

பாகற்காய், பூசணிக்காயில் தீபமா? மயிலாடுதுறை பழைமை வாய்ந்த பைரவர் கோயிலில் பக்தர்கள் விசேஷ வழிபாடு!

🕒 2 நவ., 2026, 06:24 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பாகற்காய், பூசணிக்காயில் தீபமா? மயிலாடுதுறை பழைமை வாய்ந்த பைரவர் கோயிலில் பக்தர்கள் விசேஷ வழிபாடு! - படம் 1
📸1 / 5
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (5)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •மயிலாடுதுறை மாவட்டம் சேத்திரபாலபுரம் காலபைரவர் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தேங்காய், பூசணிக்காய் மற்றும் பாகற்காயில் தீபமேற்றி பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த சேத்திரபாலபுரத்தில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த காலபைரவர் ஆலயத்தில், ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நாய் வாகனம் இன்றி மேற்கு நோக்கியமைந்துள்ள இந்த ஆலயம், காலபைரவரின் 108 நாமாவளியில் 'சேத்திரபாலாய போற்றி' என்று போற்றப்படும் சிறப்புடையது. புராண வரலாற்றின் படி  பைரவரின் சூலாயுதம் கிடைக்கப்பெற்றதால் இங்கு ஆனந்தகால பைரவராக அவர் வீற்றிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், அர்ஜூனன் வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இதற்கு உண்டு.

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், திருமணத் தடை நீங்கவும், நினைத்த காரியங்கள் கைகூடவும் பக்தர்கள் தேங்காய், பூசணிக்காய் மற்றும் பாகற்காய் ஆகியவற்றில் தீபமேற்றி வழிப்பட்டனர். காலை முதலே ஏராளமான பக்தர்கள் ஆலயத்தை 11 முறை வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டின் தொடர்ச்சியாக பக்தர்களுக்கு அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔