Settings

முகப்பு/ஆன்மீகம்/தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா: திருக்கடையூரில் கலசாபிஷேகம்
ஆன்மீகம்

தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா: திருக்கடையூரில் கலசாபிஷேகம்

🕒 1 நவ., 2026, 09:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திர விழா: திருக்கடையூரில் கலசாபிஷேகம் - படம் 1
📸1 / 5
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (5)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானத்தின் ஜென்ம நட்சத்திர திருநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு கலசாபிஷேகம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டில் குருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட முதன்மையான சைவ ஆதீன திருமடமான தருமபுரம் ஆதீனம் உள்ளது. தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். குருமகா சன்னிதானத்தின் 61-வது அவதார ஜென்ம நட்சத்திர பெருவிழா புனர்பூசம் நட்சத்திர தினமான இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு வந்த குருமகா சன்னிதானத்திற்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து குருமகா சன்னிதானம் கோபூஜை மற்றும் கஜபூஜை செய்தார். கோயில் சங்கு மண்டபத்தில் 16 கலசங்களில் புனிதநீர் வைக்கப்பட்டு கணபதி, நவகிரக, தன்வந்திரி, மிருத்யுஞ்சய, ஆயுஷ் ஹோமங்கள் செய்யப்பட்டு குருமகா சன்னிதானத்திற்கு கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு தட்சிணாமூர்த்தி சன்னதியில் சிவாச்சாரியார்கள் குருமகா சன்னிதானத்துக்கு கலசபிஷேகம், தீப ஆராதனை செய்து வைத்தனர். தொடர்ந்து குருமகா சன்னிதானம் விநாயகர், முருகன், அமிர்தகடேஸ்வரர், காலசம்ஹாரமூர்த்தி மற்றும் அபிராமி அம்பாள் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனை அடுத்து தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ அபிராமி பட்டர் கலையரங்கத்தை திறந்து வைத்தார். மேலும் கலையரங்கத்தில் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் காசிமடத்து அதிபர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔