Settings

முகப்பு/ஆன்மீகம்/பழமை வாய்ந்த வடகண்டம் தர்மபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.
ஆன்மீகம்

பழமை வாய்ந்த வடகண்டம் தர்மபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

🕒 1 நவ., 2026, 07:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பழமை வாய்ந்த வடகண்டம் தர்மபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம். - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •பழமை வாய்ந்த வடகண்டம் தர்மபுரீஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா.திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம் வடகண்டம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத தர்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர், முருகன்,அம்மாள் சன்னதியில் உள்ள கோபுரங்களுக்கும் இன்றைய தினம் குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக இந்த குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு ஆலய திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் கடந்த 30ம் தேதி கோவில் வளாகத்தில் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி முதல் கால யாக பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை முடிவுற்று இன்று காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்று மகா பூர்ணாகதி நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் ஒலிக்க வேத மந்திரங்கள் முழங்க புனித கடங்களை தலையில் சுமந்தவாறு ஆலயத்தைச் சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தை வந்தடைந்தனர். அதனைத் தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔