திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தவளகிரீஸ்வரர் மலைக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது.
சுமார் 1,440 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலில் நடைபெறும் தீபத் திருவிழாவைக் காண, வந்தவாசியைச் சுற்றியுள்ள சென்னாவரம், காரம், கொசப்பட்டு, பெருநகர், தெள்ளார், கீழ்க்கொடுங்காலூர், அம்மையப்பட்டு, மும்முனி, பாதிரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மகா தீபத்தைப் போலவே, பிரசித்தி பெற்ற இந்தத் தவளகிரி ஈஸ்வரர் மலைக்கோவிலிலும் தீபம் ஏற்றப்படுவது இப்பகுதி மக்களிடையே ஆன்மீக ரீதியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.









