திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வலியுறுத்தி, திமுக மாணவரணியினர் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி ஐந்து கண் பாலம் பகுதியில் திரண்ட திமுகவினர், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷின் உருவ பொம்மையைத் தொங்கவிட்டுத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 'தெறி' திரைப்படத்தில் இடம்பெறும் காட்சி போன்று, பொது இடத்தில் உருவ பொம்மையைத் தொங்கவிட்டு அவர்கள் நடத்திய இந்தப் போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமீபத்திய அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில், தவெக எம்.எல்.ஏ-வின் செயல்பாடுகளைக் கண்டித்து திமுகவினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









