Settings

முகப்பு/தமிழ்நாடு/கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முற்றுகை!
தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முற்றுகை!

🕒 4 நவ., 2026, 07:21 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு முற்றுகை! - படம் 1
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •கிருஷ்ணகிரியில் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு முன்பு, சங்கத் தேர்தல் மற்றும் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமை தூக்குவோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு முன்பு, சுமை தூக்குவோர் சங்கத்தின் அங்கீகாரத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில பாதுகாப்புச் சங்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட சுமை தூக்குவோர் முற்றுகை மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் சங்க அங்கீகாரத் தேர்தலை விரைந்து நடத்துவதுடன், வருகைப் பதிவேட்டில் பெயர்களைச் சேர்க்க வேண்டும், 2022-ம் ஆண்டு முன் தேதியிட்டு பச்சை அட்டை வழங்க வேண்டும், மற்றும் 2025 ஜூலை 12-ம் தேதிக்கு முந்தைய நிலுவையில் உள்ள 60 சதவீத கூலி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மேலும், ஆதார் அட்டை இணைப்பில் நிர்வாகம் செய்த தவறுகளை நிர்வாகமே உடனடியாகத் திருத்த வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔