தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் புதிதாகத் திறந்த பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லை எனப் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தின் முதல் நடைமேடையில், பயணிகள் வெயில் மற்றும் மழையிலிருந்து தற்காத்துக் கொள்ள போதிய நிழற்குடை வசதி இல்லை எனப் புகார்கள் எழுந்துள்ளன. மேலும், பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட சில இடங்களை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாகவும் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
நான்காவது நடைமேடையில் நகரப் பேருந்துகள் நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்ற நிழற்குடையை, முதல் நடைமேடையிலும் உடனடியாக அமைக்க வேண்டும் எனப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

