விருதுநகரில் சரஸ்வதியம்மாள் லயன்ஸ் பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதன் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தேசபந்து திடலில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் கொடியசைத்துத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்றைய இளைய சமுதாயத்தைச் சீரழிக்கும் போதைப்பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க இத்தகைய ஊர்வலங்கள் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் லயன்ஸ் சங்கச் செயலாளர் முரளிதரன், முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன் மற்றும் முத்துசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், பள்ளியின் தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்கள் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், போதையின் தீமைகளை விளக்கும் முழக்கங்களை எழுப்பியும் தேசபந்து திடல் மற்றும் அதன் முக்கிய வீதிகளின் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளைப் பள்ளி நிர்வாகமும் லயன்ஸ் சங்கமும் இணைந்து செய்திருந்தன.

