Settings

முகப்பு/நகரங்கள்/ஸ்டார்ட் ஆகாத அரசுப் பேருந்து மாணவர்களும் பொதுமக்களும் சேர்ந்து தள்ளிய காட்சி
நகரங்கள்

ஸ்டார்ட் ஆகாத அரசுப் பேருந்து மாணவர்களும் பொதுமக்களும் சேர்ந்து தள்ளிய காட்சி

🕒 23 நவ., 2026, 01:26 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஸ்டார்ட் ஆகாத அரசுப் பேருந்து மாணவர்களும் பொதுமக்களும் சேர்ந்து தள்ளிய காட்சி - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூரில் ஸ்டார்ட் ஆகாத அரசுப் பேருந்தை பள்ளி மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளை முறையாகப் பராமரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளுடன் கும்பகோணத்திற்குப் புறப்படத் தயாராக இருந்த அரசுப் பேருந்தை ஓட்டுநர் இயக்க முயன்றபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். தொடர்ந்து, பேருந்து இயக்கத்திற்கு உதவ பயணிகள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பேருந்தைத் தள்ளினர். சிறிது தூரம் தள்ளிய பிறகு பேருந்து இயங்கத் தொடங்கியதை அடுத்து, மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு கும்பகோணத்திற்குப் புறப்பட்டுச் சென்றது.

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசுப் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாமல் இயக்கப்படுவதாகவும், இதனால் அவை பாதியிலேயே பழுதடைந்து நிற்பதாகவும் பொதுமக்கள் தரப்பில் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, பேருந்துகள் பழுதுபடும் நேரங்களில் பள்ளி மாணவ-மாணவிகளே பேருந்துகளைத் தள்ளும் இக்கட்டான சூழல் தொடர்வதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

போக்குவரத்துக் கழக பணிமனைகளில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே இதுபோன்ற தொடர் நிகழ்வுகளுக்குக் காரணம் எனக் கூறும் பொதுமக்கள், குறிப்பாக மகளிர் இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட சேவைகளுக்காக இயக்கப்படும் பேருந்துகளும் இதே போன்ற பழுதுகளுடன் இயக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துப் பேருந்துகளையும் முறையாகப் பரிசோதித்து பராமரிக்க வேண்டும் என்றும், பயணிகள் நடுவழியில் அவதிப்படுவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகைநகரங்கள்

அடுக்குமாடி குடியிருப்பு பணிகளை முடிக்கக் கோரி அலுவலகம் முற்றுகை

Muralidharan🕒 நவ. 23
பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனுநகரங்கள்

பொருட்காட்சி டெண்டர் விவகாரம்: மாவட்ட ஆட்சியரிடம் தமிழ்நாடு பொருட்காட்சி நலச் சங்கம் மனு

Muralidharan🕒 நவ. 23
30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைக்கலனா நடவடிக்கை! திருவையாறு நகராட்சி அதிரடி உத்தரவு!நகரங்கள்

30 நாட்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைக்கலனா நடவடிக்கை! திருவையாறு நகராட்சி அதிரடி உத்தரவு!

Rajan🕒 நவ. 23
காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!நகரங்கள்

காவல் நிலையத்திற்கு அருகிலேயே நடக்கும் அராஜகம்... விழுப்புரம் சிக்னலில் தொடரும் விபத்துகள்!

Arivazhagan🕒 நவ. 23
எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்செய்திகள்

எம் எல் ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டு காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்த மாவட்ட ஆட்சியர்

Arivazhagan🕒 நவ. 24
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!ஆன்மீகம்

பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ட்ரோன் காட்சிகள்!

Manimaran🕒 நவ. 23
TNO வாட்ஸ்அப் சானல் ➔