திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தீபதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (24ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்கள், சிவபெருமான் ஒருவனே என்பதை விளக்கும் வகையில், சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி கோஷத்துடன் தரிசனம் செய்தனர் 'அனேகன், ஏகன்' என்பதை விளக்கும் வகையில் இன்று மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவையொட்டி சுவாமி சன்னதி முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கோவில் வளாகம் முழுவதும், வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ஆன்மீகம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
🕒 24 நவ., 2026, 03:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








