இந்தியா
ராமநாதபுரம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக D.N.ஹரி கிரன் பிரசாத் ஐ.பி.எஸ் அவரது தாயார் கஸ்தூரியை வணங்கிய பிறகு பொறுப்பேற்றார்.
🕒 9 நவ., 2026, 10:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
இங்கிருந்த போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ் சென்னை தெற்கு போக்குவரத்து துணை கமிஷனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த D.N.ஹரி கிரன் பிரசாத் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார்.அவர் நேற்று ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அவரது தாயார் கஸ்தூரியை வணங்கி பிறகு பொறுப்பேற்றார். அவருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜி.சந்தீஷ் ஐ.பி.எஸ்,துணை போலீஸ் சூப்பிரண்டுகள்,இன்ஸ்பெக்டர்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு D.N.ஹரி கிரன் பிரசாத் கூறுகையில்:-
”மாவட்டத்தில் ஏற்கனவே கடலோரப் பாதுகாப்பு குழும போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்துள்ளேன். பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, இமானுவேல் சேகரனார் குருபூஜை பாதுகாப்பு பணிக்கும் வந்துள்ளேன். போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு, பெண்கள், மக்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையில் சிறப்பாக பணியாற்றுவேன் என்றார்.








