மதுரையில் வீடு புகுந்து மர்ம கும்பல் நடத்திய பயங்கரத் தாக்குதலில் சந்தோஷ் (25) என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சந்தோஷின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த கும்பல், அவரைச் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியது. சொத்துத் தகராறு தொடர்பாக ஏற்கெனவே சந்தோஷ் மீது சில வழக்குகள் உள்ளதாகவும், அவர் சமீபத்தில்தான் ஜாமினில் வெளியே வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தலைமறைவான மர்ம கும்பலைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.









